• Feb 09 2026

டிட்வா புயலில் சிக்கி 643 பேர் பலி - 6000 வீடுகள் முழுமையாக சேதம்

Chithra / Dec 14th 2025, 8:39 am
image



நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாகவும் 184 பேர் இன்னும் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


நாட்டின் 25 மாவட்டங்களும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 


23041 குடும்பங்களைச் சேர்ந்த 72911 பேர் 796 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயலில் சிக்கி 643 பேர் பலி - 6000 வீடுகள் முழுமையாக சேதம் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாகவும் 184 பேர் இன்னும் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.நாட்டின் 25 மாவட்டங்களும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 23041 குடும்பங்களைச் சேர்ந்த 72911 பேர் 796 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement