டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் வவுனியா ஏ- 9 வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில்,
வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
டிப்பருடன் மோதிய மோட்டார் சைக்கிள் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் வவுனியா ஏ- 9 வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில்,வவுனியாவிலிருந்து இரட்டைபெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், ஏ9 வீதியில் அமைந்துள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகாமையில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச (வயது 46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.