• Oct 31 2024

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கோர விபத்து- 07 பேர் படுகாயம்!

Tamil nila / Oct 31st 2024, 6:56 pm
image

Advertisement

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (31) பிற்பகல் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 05 பேரும் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கோர விபத்து- 07 பேர் படுகாயம் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (31) பிற்பகல் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 05 பேரும் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement