• Nov 22 2024

60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் விழுந்த கார் - நான்கு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

Tamil nila / Oct 31st 2024, 7:25 pm
image

சுமார் 60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் இன்று (31) அதிகாலை கார் ஒன்று வீழ்ந்ததில்  நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனமடுவ, தோணிகல, ஒருகல பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷ முடியசெல சமிந்த உபுல் குமார எனும் 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் இன்று 31ஆம் திகதி அதிகாலையில் தனது காரில் கல் குவாரியொன்றுக்கு பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில், குறித்த கார் வழுக்கி குவாரியில் உள்ள பாரிய பாறை குழி ஒன்றிற்குள் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் போது, குறித்த கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அந்த காரை செலுத்திச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தியேலயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் தற்போது விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயி எனவும், இதற்கு முன்னர் கிரானைட்டை பாயன்படுத்தி கருங்கற்கள் உடைக்கும் பணியில் ஈடுபட்டு ஈபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் விழுந்த கார் - நான்கு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு சுமார் 60 அடி ஆழமுள்ள பாறை குழிக்குள் இன்று (31) அதிகாலை கார் ஒன்று வீழ்ந்ததில்  நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஆனமடுவ, தோணிகல, ஒருகல பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷ முடியசெல சமிந்த உபுல் குமார எனும் 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர் இன்று 31ஆம் திகதி அதிகாலையில் தனது காரில் கல் குவாரியொன்றுக்கு பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில், குறித்த கார் வழுக்கி குவாரியில் உள்ள பாரிய பாறை குழி ஒன்றிற்குள் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் போது, குறித்த கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அந்த காரை செலுத்திச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தியேலயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் தற்போது விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயி எனவும், இதற்கு முன்னர் கிரானைட்டை பாயன்படுத்தி கருங்கற்கள் உடைக்கும் பணியில் ஈடுபட்டு ஈபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement