தகவலுக்கமையகுறித்த பகுதிக்கு பரிசோதனைக்கு சென்ற நிலையில், மீன்கள் ஐஸ்பெட்டிக்குள் கரைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது.
அதனையடுத்து குறித்த மீன்களை பாவனைக்கு உதவாத மீனாக எடுத்துக்கொண்டு அவை அழிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 134 கிலோகிராம் மீன்கள் அழிக்கப்பட்டன. அதன்பின்னர் குறித்த மீன் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.
கொக்குவில் மீன் சந்தையில் பாவனைக்கு உதவாத மீன்கள்; 134 கிலோகிராம் மீன்கள் அழிப்பு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கொக்குவில் மீன் சந்தையில் பாவனைக்கு உதவாத 134 கிலோகிராம் மீன்கள் அப்பகுதி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ராஜமேனகனால் அழிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் மீன்சந்தையில் மீன்களை ஐஸ் கியூப் இல் போட்டு வைத்து விட்டு சில மீனவர்கள் சென்று விடுகின்றனர். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் சந்தை திறப்பதில்லை. ஆகையால் வியாழக்கிழமைகளில் மீன்களை ஜஸ் கியூப் பெட்டிக்குள் வைத்து விட்டு சென்று விடுவார்கள். அந்த மீன்களையே சனிக்கிழமை எடுத்து விற்பனை செய்வார்கள். வியாழக்கிழமை ஐஸ் கியூப்பிற்குள் வைக்கப்பட்ட மீன்களை சனிக்கிழமை எடுக்கும் போது அந்த மீன்கள் அழுகிய நிலையில் காணப்படும். இவ்வாறு குறித்த சந்தையில் மீன்கள் விற்கப்படுவதாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு பரிசோதனைக்கு சென்ற நிலையில், மீன்கள் ஐஸ்பெட்டிக்குள் கரைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. அதனையடுத்து குறித்த மீன்களை பாவனைக்கு உதவாத மீனாக எடுத்துக்கொண்டு அவை அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 134 கிலோகிராம் மீன்கள் அழிக்கப்பட்டன. அதன்பின்னர் குறித்த மீன் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.