ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.
மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.
மேற்படி 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர்
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அறிவித்து வருகின்றனர்.
அதேபோல் மொட்டுக் கட்சி பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் செயற்பட்டு வருகின்றார்.
எனினும், நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலபிட்டிய ஆசனத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே பங்கேற்றுள்ளார்.
கம்பஹா மாவட்டம் என்பது பசில் ராஜபக்சவின் அரசியல் கோட்டையாகவும் விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
பசிலின் கோட்டையை கைப்பற்றிய ரணில் - மொட்டு எம்.பிக்கள் 7 பேர் ரணிலுக்கு ஆதரவு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.மேற்படி 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அறிவித்து வருகின்றனர். அதேபோல் மொட்டுக் கட்சி பட்டியலில் கம்பஹா மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் செயற்பட்டு வருகின்றார்.எனினும், நாமல் ராஜபக்ச தலைமையில் திவுலபிட்டிய ஆசனத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே பங்கேற்றுள்ளார். கம்பஹா மாவட்டம் என்பது பசில் ராஜபக்சவின் அரசியல் கோட்டையாகவும் விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது