• Sep 19 2024

உணவு பற்றாக்குறையினால் 7 பொலிஸ் குதிரைகள் உயிரிழப்பு?

Chithra / Dec 5th 2022, 9:24 am
image

Advertisement

இலங்கையில் பொலிஸ் குதிரைப்படை பிரிவுக்கு சொந்தமான அதிக பெறுமதியான 07 குதிரைகள் உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

35 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான குதிரைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஆராய்ந்த போது கடந்த 3 மாதங்களில் மூன்று குதிரைகளே உயிரிழந்துள்ளது. இரண்டு குதிரைகள் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குதிரைகளுக்கு வழங்கப்படும் சில தீவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இலங்கைக்கு தீவனம் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், உணவுப் பற்றாக்குறை இருந்தபோதிலும், குதிரைகள் மிகவும் வலுவான காலத்தை கடத்தியதாக பொலிஸ் குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது.

உணவு பற்றாக்குறையினால் 7 பொலிஸ் குதிரைகள் உயிரிழப்பு இலங்கையில் பொலிஸ் குதிரைப்படை பிரிவுக்கு சொந்தமான அதிக பெறுமதியான 07 குதிரைகள் உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.35 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான குதிரைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எவ்வாறாயினும், இது தொடர்பில் ஆராய்ந்த போது கடந்த 3 மாதங்களில் மூன்று குதிரைகளே உயிரிழந்துள்ளது. இரண்டு குதிரைகள் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக பிரிவு தெரிவித்துள்ளது.எனினும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த குதிரைகளுக்கு வழங்கப்படும் சில தீவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இலங்கைக்கு தீவனம் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், உணவுப் பற்றாக்குறை இருந்தபோதிலும், குதிரைகள் மிகவும் வலுவான காலத்தை கடத்தியதாக பொலிஸ் குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement