காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களில் சுமார் 74 பேர் கடந்த மாதத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.எஸ்.டி.யு.எம். ரங்கா தெரிவித்தார்.
வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் ஆகியோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் காலி மாநகர சபை, காலி வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை வைத்தியசாலையில் அமுல்படுத்தியுள்ளது.
அதேவேளை, கடந்த காலங்களில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை எனவும், மழையுடன் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரங்களில் காலி மாவட்டத்தில் டெங்கு என சந்தேகிக்கப்படும் 162 பேர் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணியாற்றும் 74 ஊழியர்களுக்கு டெங்கு. காலி, கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களில் சுமார் 74 பேர் கடந்த மாதத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.எஸ்.டி.யு.எம். ரங்கா தெரிவித்தார்.வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் ஆகியோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில் காலி மாநகர சபை, காலி வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை வைத்தியசாலையில் அமுல்படுத்தியுள்ளது.அதேவேளை, கடந்த காலங்களில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை எனவும், மழையுடன் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.கடந்த மூன்று வாரங்களில் காலி மாவட்டத்தில் டெங்கு என சந்தேகிக்கப்படும் 162 பேர் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.