• Nov 22 2024

அபாயத்தில் 74 பாடசாலைகள்..! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 6th 2023, 4:43 pm
image

 

நாட்டில் 74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார். 

இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், 

நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேஸ்டன் கல்லூரி, தங்காலையில் உள்ள ஓர் பாடசாலை, சேருநுவர சோமாதேவி பாடசாலை, தொம்பே ஆரம்பப் பாடசாலை கூட பாதுகாப்பற்ற கட்டிடங்களைக் கொண்டுள்ளது. 

தொம்பே ஆரம்பப் பிரிவு பாடசாலையில் பணம் இல்லாததால் குறித்த கட்டிடத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுங்கள்.

இது ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து, வலய கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொம்பே பாடசாலை அதிபரை அழைத்து வந்து கண்டித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர சோமாதேவி பாடசாலையில் 300 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். இந்த பாடசாலை வகுப்பறைகளில் புத்து கட்டப்பட்டு சில வகுப்பறைகளில் பாம்பு கூட இருக்கிறது. 

நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர்கள் யார் என்பதை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். 

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறிவிட்டு, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அபாயத்தில் 74 பாடசாலைகள். எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்  நாட்டில் 74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார். இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தேஸ்டன் கல்லூரி, தங்காலையில் உள்ள ஓர் பாடசாலை, சேருநுவர சோமாதேவி பாடசாலை, தொம்பே ஆரம்பப் பாடசாலை கூட பாதுகாப்பற்ற கட்டிடங்களைக் கொண்டுள்ளது. தொம்பே ஆரம்பப் பிரிவு பாடசாலையில் பணம் இல்லாததால் குறித்த கட்டிடத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுங்கள்.இது ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து, வலய கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொம்பே பாடசாலை அதிபரை அழைத்து வந்து கண்டித்துள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர சோமாதேவி பாடசாலையில் 300 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். இந்த பாடசாலை வகுப்பறைகளில் புத்து கட்டப்பட்டு சில வகுப்பறைகளில் பாம்பு கூட இருக்கிறது. நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர்கள் யார் என்பதை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.எனவே, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறிவிட்டு, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement