• May 05 2025

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததில் 77 பேர் உயிரிழப்பு!

Tharmini / Jan 19th 2025, 1:42 pm
image

நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18) வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜாவில் பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிவு ஏற்பட்டது.

மக்கள் எரிபொருளை சேரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அது வெடித்தது.

இதன்போது எரிபொருள் சேகரிக்க சென்ற மக்கள் உயிரிழந்தனர் மற்றும் மீட்பு பணியாளர்கள் உட்பட 25 பேர் காயமடைந்ததாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் அண்மைய மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, எண்ணெய் வளம் மிக்க டெல்டா மாநிலத்தில் விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசர் வெடித்ததில் குறைந்தது ஐந்து பேர் பலியாகினர்.

மேலும் ஒக்டோபரில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க முயன்றபோது எரிபொருள் பவுசர் வெடித்ததில் குறைந்தது 153 பேர் உயிரிழந்தமையும் குறிப்படத்தக்கது.


நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததில் 77 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (18) வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜாவில் பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிவு ஏற்பட்டது.மக்கள் எரிபொருளை சேரிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அது வெடித்தது.இதன்போது எரிபொருள் சேகரிக்க சென்ற மக்கள் உயிரிழந்தனர் மற்றும் மீட்பு பணியாளர்கள் உட்பட 25 பேர் காயமடைந்ததாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் அண்மைய மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.இரண்டு வாரங்களுக்கு முன்பு, எண்ணெய் வளம் மிக்க டெல்டா மாநிலத்தில் விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசர் வெடித்ததில் குறைந்தது ஐந்து பேர் பலியாகினர்.மேலும் ஒக்டோபரில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க முயன்றபோது எரிபொருள் பவுசர் வெடித்ததில் குறைந்தது 153 பேர் உயிரிழந்தமையும் குறிப்படத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now