• Apr 17 2026

78 ஆவது சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள்;கிளிநொச்சியில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்!

shanu / Feb 4th 2026, 12:44 pm
image

கிளிநொச்சியில் இன்று சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 


இலங்கையின் 78 ஆவது சுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில்  ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. 


இது ஒருபுறமிருக்க வடக்கு - கிழக்கில் சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்துத் தரப்பினரிடமும் ஆதரவு கோரியிருந்தது. 


அதற்கமைய வடக்கு - கிழக்கில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியொன்றை மேற்கொள்ள அனைத்துத் தரப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளது. 


இந்த நிலையில் தான் சுதந்திரதினமான இன்று தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

78 ஆவது சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள்;கிளிநொச்சியில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள் கிளிநொச்சியில் இன்று சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இலங்கையின் 78 ஆவது சுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில்  ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இது ஒருபுறமிருக்க வடக்கு - கிழக்கில் சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்துத் தரப்பினரிடமும் ஆதரவு கோரியிருந்தது. அதற்கமைய வடக்கு - கிழக்கில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியொன்றை மேற்கொள்ள அனைத்துத் தரப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளது. இந்த நிலையில் தான் சுதந்திரதினமான இன்று தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி சுதந்திரதினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement