• Jul 16 2026

எதிரியின் ஆக்கிரமிப்புக்கு பதிலடி?அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைப்பதாக ஈரான் அறிவிப்பு

Ziya / Jul 16th 2026, 9:25 am
image

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.


ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை 'ஆபரேஷன் சயேகே' (Operation Sayegeh) என்ற இராணுவ நடவடிக்கையின் ஒன்பதாவது கட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், "எதிரியின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்" என ஈரான் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.


இந்த அறிவிப்பு, அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில் வெளியாகியுள்ளது. ஜோர்டானில் அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


எதிரியின் ஆக்கிரமிப்புக்கு பதிலடிஅமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைப்பதாக ஈரான் அறிவிப்பு மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை 'ஆபரேஷன் சயேகே' (Operation Sayegeh) என்ற இராணுவ நடவடிக்கையின் ஒன்பதாவது கட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், "எதிரியின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்" என ஈரான் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.இந்த அறிவிப்பு, அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில் வெளியாகியுள்ளது. ஜோர்டானில் அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement