• Nov 27 2024

யுக்திய நடவடிக்கையில் 818 சந்தேக நபர்கள் கைது...!samugammedia

Sharmi / Jan 27th 2024, 11:17 am
image

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 264 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 159 கிராம் ஹெராயின், 112 கிராம் பனி, கஞ்சா 08 கிலோ, 4,933 கஞ்சா செடிகள், மாவா 235 கிராம்,மதனமோதக 88 கிராம், 329 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேக நபர்களில் 01 சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான  08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 264 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 25 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான 231 திறந்த பிடியாணைகளும் உள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையில் 818 சந்தேக நபர்கள் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 264 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 159 கிராம் ஹெராயின், 112 கிராம் பனி, கஞ்சா 08 கிலோ, 4,933 கஞ்சா செடிகள், மாவா 235 கிராம்,மதனமோதக 88 கிராம், 329 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேக நபர்களில் 01 சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான  08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட 264 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 25 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான 231 திறந்த பிடியாணைகளும் உள்ளனர்.கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement