• Jul 08 2025

பெண் சுற்றுலாப்பயணியிடம் எல்லை மீறிய இளைஞர்கள்! - தட்டிக்கேட்க சென்ற கணவரை துரத்தி துரத்தி தாக்கும் காட்சி!

Thansita / Jul 8th 2025, 12:03 am
image

தட்டிக்கேட்க சென்ற கணவரை துரத்தி துரத்தி தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் 

திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி  தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில்  நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத  முறையில் தொட முயன்றுள்ளனர். குறித்த விடயத்தை  அவரது கணவர்  கேட்கச் சென்றபோதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த தாக்குதல் தொடர்பாக உப்புவெளி பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்,

சந்தேக நபர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீடியோவைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/share/v/1CBh3PzJH1/

பெண் சுற்றுலாப்பயணியிடம் எல்லை மீறிய இளைஞர்கள் - தட்டிக்கேட்க சென்ற கணவரை துரத்தி துரத்தி தாக்கும் காட்சி தட்டிக்கேட்க சென்ற கணவரை துரத்தி துரத்தி தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி  தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில்  நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத  முறையில் தொட முயன்றுள்ளனர். குறித்த விடயத்தை  அவரது கணவர்  கேட்கச் சென்றபோதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக உப்புவெளி பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்,சந்தேக நபர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.வீடியோவைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/1CBh3PzJH1/

Advertisement

Advertisement

Advertisement