• Aug 31 2025

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டும்; லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

Chithra / Aug 31st 2025, 3:18 pm
image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் இலண்டனிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலண்டன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எற்பாட்டிலேயே நேற்றையதினம் இவ் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலண்டன் மாநகரில் முன்னேடுக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டும், மற்றும் செம்மணி மனித புதைகுழிக்கான நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இப் போராட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பும்பெயர்ந்தோர் பலரும் கலந்துகொண்டு பதாதைகளை ஏந்தியதோடு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்  வலியுறுத்தினர்.


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டும்; லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் இலண்டனிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலண்டன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எற்பாட்டிலேயே நேற்றையதினம் இவ் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இலண்டன் மாநகரில் முன்னேடுக்கப்பட்ட இப்போராட்டத்தின்போது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டும், மற்றும் செம்மணி மனித புதைகுழிக்கான நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இப் போராட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பும்பெயர்ந்தோர் பலரும் கலந்துகொண்டு பதாதைகளை ஏந்தியதோடு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்  வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement