• Aug 31 2025

வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி! தேசிய ரீதியில் முதலிடம்

Chithra / Aug 31st 2025, 2:36 pm
image

காலி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவ்வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளார்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதற்தடவையாகும்.

49ஆவது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றையதினம் (31) நிறைவடையவுள்ளது.


 

வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி தேசிய ரீதியில் முதலிடம் காலி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவ்வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளார்.கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதற்தடவையாகும்.49ஆவது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றையதினம் (31) நிறைவடையவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement