பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு பின்னர், சீனாவுக்கான விஜயத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார்.
அதிக சனத் தொகையினை கொண்டு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இன்று (31) இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அதிக வரிவிதிப்புக்கு மத்தியில் சீனா மற்றும் இந்திய ஆகிய நாடுகள் சாதகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இமயமலைத் தொடரில் உள்ள sacred மலை மற்றும் ஏரிக்கான புனித யாத்திரையான கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்படுவது குறித்தும் இதன்போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளிலும் உள்ள 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் எங்கள் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
இது முழு மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும்" என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அங்கு கருத்து வௌியிட்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இந்தியாவும் சீனாவும் "நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது முக்கியமானதாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகம் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான நாடுகளாகும்.
எனவே நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் ஒன்றிணைவது மிக முக்கியம் என்றும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதியையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதால், அமெரிக்க ஜனாதிபதியினால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத இறக்குமதியை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் மோடி சீனா ஜனாதிபதியுடன் பேச்சு பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர், சீனாவுக்கான விஜயத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார். அதிக சனத் தொகையினை கொண்டு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இன்று (31) இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் அதிக வரிவிதிப்புக்கு மத்தியில் சீனா மற்றும் இந்திய ஆகிய நாடுகள் சாதகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இமயமலைத் தொடரில் உள்ள sacred மலை மற்றும் ஏரிக்கான புனித யாத்திரையான கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்படுவது குறித்தும் இதன்போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளிலும் உள்ள 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் எங்கள் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது முழு மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும்" என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அங்கு கருத்து வௌியிட்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இந்தியாவும் சீனாவும் "நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது முக்கியமானதாகும் என்று வலியுறுத்தியுள்ளார். உலகம் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான நாடுகளாகும். எனவே நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் ஒன்றிணைவது மிக முக்கியம் என்றும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த உச்சி மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதியையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதால், அமெரிக்க ஜனாதிபதியினால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத இறக்குமதியை விதித்தமை குறிப்பிடத்தக்கது.