அவுஸ்ரேலியாவுக்கான பேரணி என்ற பெயரில் குடியேறிகளுக்கு எதிராகப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெர்ரா, அடிலைட், பெர்த் போன்ற நகரங்களில் அதிகமாக பிற நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் (31) அவுஸ்ரேலியாவுக்கான பேரணி என்ற பெயரில் குடியேறிகளுக்கு எதிராக பலர் திரண்டனர்.
அவுஸ்ரேலியா முழுவதும் உள்ள தலைநகரங்களிலும் குறித்த பேரணி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், அவுஸ்ரேலியாவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், இனம் மற்றும் இனக்குழு மையவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிர வலதுசாரி குழுக்களின் செயல்பாடு நாட்டில் இருக்கக் கூடாது
அனைத்து அவுஸ்ரேலியர்களும், அவர்களின் பூர்வீகம் எதுவாக இருந்தாலும், பாதுகாப்பாகவும், வரவேற்கத்தக்கவர்களாகவும் உணர உரிமை உண்டு
மேலும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு நாட்டில் இடம் இல்லை
பல்லின கலாச்சாரம் நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் மதிப்புமிக்க பகுதி
இனவாதத்தை தூண்டும் வகையில் பேரணி நடத்திய குழுக்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் குடியேறிகளுக்கு எதிராகப் நடைபெற்ற பேரணி அவுஸ்ரேலியாவுக்கான பேரணி என்ற பெயரில் குடியேறிகளுக்கு எதிராகப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெர்ரா, அடிலைட், பெர்த் போன்ற நகரங்களில் அதிகமாக பிற நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்றைய தினம் (31) அவுஸ்ரேலியாவுக்கான பேரணி என்ற பெயரில் குடியேறிகளுக்கு எதிராக பலர் திரண்டனர். அவுஸ்ரேலியா முழுவதும் உள்ள தலைநகரங்களிலும் குறித்த பேரணி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், அவுஸ்ரேலியாவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இனம் மற்றும் இனக்குழு மையவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிர வலதுசாரி குழுக்களின் செயல்பாடு நாட்டில் இருக்கக் கூடாதுஅனைத்து அவுஸ்ரேலியர்களும், அவர்களின் பூர்வீகம் எதுவாக இருந்தாலும், பாதுகாப்பாகவும், வரவேற்கத்தக்கவர்களாகவும் உணர உரிமை உண்டுமேலும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு நாட்டில் இடம் இல்லைபல்லின கலாச்சாரம் நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் மதிப்புமிக்க பகுதிஇனவாதத்தை தூண்டும் வகையில் பேரணி நடத்திய குழுக்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.