மட்டக்களப்பில் ஒருவாரத்தில் மட்டும் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.
அதில் 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு ஆண் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பில் ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் வாந்தி எடுத்துள்ளார்.
அவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளனர்.
கடந்த 3 மாதத்திற்கு முன், சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும்,
அவனை அடையாளம் தெரியாது எனவும் பொலிஸாரின் விசாரணையின் சிறுமி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்க,
குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பில் இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் - இரு சிறுவர்கள் கைது மட்டக்களப்பில் ஒருவாரத்தில் மட்டும் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.அதில் 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு ஆண் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் தெரியவருகையில்,மட்டக்களப்பில் ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் வாந்தி எடுத்துள்ளார்.அவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளனர்.கடந்த 3 மாதத்திற்கு முன், சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும், அவனை அடையாளம் தெரியாது எனவும் பொலிஸாரின் விசாரணையின் சிறுமி தெரிவித்துள்ளார். அதேவேளை, அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர்.இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்க,குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாடு செய்துள்ளார்.அதன்பின் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.மட்டக்களப்பில் இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.