• Oct 12 2026

AI தொழில்நுட்பத்தில் புதிய மோசடி – ஒரு ரசீதை மட்டும் நம்பினால் பணத்தை இழக்கலாம்

Chithra / Oct 11th 2026, 5:24 pm
image


செயற்கை நுண்ணறிவு மற்றும் எடிட்டிங் கருவிகளை பயன்படுத்தி,போலியான பணப்பரிமாற்ற ரசீதுகளை உருவாக்கி மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


மோசடிக்காரர்கள், பொருட்களை வாங்குவதாக அல்லது சேவையைப் பெறுவதாகக் கூறி,வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது மெசஞ்சர் (Messenger) போன்ற சமூக ஊடகத் தளங்கள் ஊடாக போலியான பணப்பரிமாற்ற ரசீதுகளை அனுப்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அந்த ரசீதுகளில், கணக்கு எண்,பரிவர்த்தனை நேரம்,பெயர்,தொகை, போன்ற தகவல்கள் உண்மையான ரசீதுகளைப் போன்றே காட்டப்படலாம்.


எனவே,ரசீதை மட்டும் நம்பாமல், வங்கிக் கணக்கில் பணம் உண்மையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பொருட்களை அல்லது சேவைகளை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

AI தொழில்நுட்பத்தில் புதிய மோசடி – ஒரு ரசீதை மட்டும் நம்பினால் பணத்தை இழக்கலாம் செயற்கை நுண்ணறிவு மற்றும் எடிட்டிங் கருவிகளை பயன்படுத்தி,போலியான பணப்பரிமாற்ற ரசீதுகளை உருவாக்கி மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிக்காரர்கள், பொருட்களை வாங்குவதாக அல்லது சேவையைப் பெறுவதாகக் கூறி,வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது மெசஞ்சர் (Messenger) போன்ற சமூக ஊடகத் தளங்கள் ஊடாக போலியான பணப்பரிமாற்ற ரசீதுகளை அனுப்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த ரசீதுகளில், கணக்கு எண்,பரிவர்த்தனை நேரம்,பெயர்,தொகை, போன்ற தகவல்கள் உண்மையான ரசீதுகளைப் போன்றே காட்டப்படலாம்.எனவே,ரசீதை மட்டும் நம்பாமல், வங்கிக் கணக்கில் பணம் உண்மையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பொருட்களை அல்லது சேவைகளை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement