• Oct 13 2026

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம்

dorin / Oct 10th 2026, 4:11 pm
image

சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்றைய தினம் (9) ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ளது.

முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

 இந்தக் கலந்துரையாடலில் குழுவின் தலைவரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருமான பிரின்ஸ் சேனாதீர, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜே. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரொருவரான ஏ.சி. கஜநாயக்க ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 இதன்போது, இதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார வழங்கினார்.

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்றைய தினம் (9) ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ளது.முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் குழுவின் தலைவரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருமான பிரின்ஸ் சேனாதீர, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜே. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரொருவரான ஏ.சி. கஜநாயக்க ஆகிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது, இதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement