திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், உப்புவெளி பிரதேச சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் வெள்ளை தம்பி சுரேஷ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உப்புவெளி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தெளிவின்மையை நீக்குவதற்காகவே இந்த ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு ஏனைய பிரதேசங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் நான்கு வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகப் பிரதேச செயலகத்தினால் அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, புளியங்குளம் வீதிக்கு மூன்று வெறும் இலட்சம் ரூபாவும், சுமேதங்கரபுர – சுது நெலும் மாவத்தை வீதிக்கு 30 இலட்சம் ரூபாவும், சுமேதங்கரபுர – மிஹிந்து மாவத்தை வீதிக்கு 45 இலட்சம் ரூபாவும், கவட்டிகுடா – தீவராக்கம வீதிக்கு 40 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஏனைய பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தாம் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்த தவிசாளர், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் சமமான வாய்ப்பும் தேவைக்கேற்ற நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், உப்புவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒன்பது வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தபோதிலும், அவற்றில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களைச் சேர்ந்த எந்தவொரு வீதியும் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவை தீர்மானிக்கப்படும் விதம் தொடர்பில் பொதுமக்களுக்கு முழுமையான தெளிவு இல்லாததால், பிரதேச சபையே வீதிகளுக்கான நிதியை ஒதுக்குவதாக மக்கள் தவறாகக் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், புளியங்குளம் வீதியின் அபிவிருத்திக்கு உப்புவெளி பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை எனத் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு, மக்களைத் தமக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தவிசாளர் குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாகப் பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, சபையின் அன்றாட நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆராய்ந்து அனுமதி வழங்குவதே பிரதேச சபையின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பான உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே ஊடகச் சந்திப்பை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட கட்சி எனக் குறிப்பிட்ட அவர், உப்புவெளி பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் சமத்துவமாக நடத்தி, அவர்களுடன் இணைந்து சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் கோரிக்கை விடுத்த தவிசாளர், மாவட்டத்தின் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதைத் தடுத்து, அனைத்து பிரதேசங்களுக்கும் நியாயமான முறையில் அபிவிருத்தி வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், உப்புவெளி பிரதேச சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றம் ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிப்பா பிரதி அமைச்சரிடம் அவசரக் கோரிக்கை திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், உப்புவெளி பிரதேச சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் வெள்ளை தம்பி சுரேஷ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.உப்புவெளி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தெளிவின்மையை நீக்குவதற்காகவே இந்த ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு ஏனைய பிரதேசங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.கடந்த வாரம் நான்கு வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகப் பிரதேச செயலகத்தினால் அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இதன்படி, புளியங்குளம் வீதிக்கு மூன்று வெறும் இலட்சம் ரூபாவும், சுமேதங்கரபுர – சுது நெலும் மாவத்தை வீதிக்கு 30 இலட்சம் ரூபாவும், சுமேதங்கரபுர – மிஹிந்து மாவத்தை வீதிக்கு 45 இலட்சம் ரூபாவும், கவட்டிகுடா – தீவராக்கம வீதிக்கு 40 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.ஏனைய பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தாம் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்த தவிசாளர், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கும் சமமான வாய்ப்பும் தேவைக்கேற்ற நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், உப்புவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒன்பது வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தபோதிலும், அவற்றில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களைச் சேர்ந்த எந்தவொரு வீதியும் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவை தீர்மானிக்கப்படும் விதம் தொடர்பில் பொதுமக்களுக்கு முழுமையான தெளிவு இல்லாததால், பிரதேச சபையே வீதிகளுக்கான நிதியை ஒதுக்குவதாக மக்கள் தவறாகக் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில், புளியங்குளம் வீதியின் அபிவிருத்திக்கு உப்புவெளி பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை எனத் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு, மக்களைத் தமக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தவிசாளர் குற்றஞ்சாட்டினார்.இதன் காரணமாகப் பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, சபையின் அன்றாட நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆராய்ந்து அனுமதி வழங்குவதே பிரதேச சபையின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்விடயம் தொடர்பான உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே ஊடகச் சந்திப்பை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட கட்சி எனக் குறிப்பிட்ட அவர், உப்புவெளி பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் சமத்துவமாக நடத்தி, அவர்களுடன் இணைந்து சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் கோரிக்கை விடுத்த தவிசாளர், மாவட்டத்தின் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதைத் தடுத்து, அனைத்து பிரதேசங்களுக்கும் நியாயமான முறையில் அபிவிருத்தி வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், உப்புவெளி பிரதேச சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றம் ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.