• Oct 13 2026

இலங்கையில் இனி தப்பிக்க முடியாது – 2 கோடி ரூபாய் வரை அபராதம்! பிரதமர் அதிரடி அறிவிப்பு

Chithra / Oct 11th 2026, 4:45 pm
image


இலங்கையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுகளை அகற்றுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


இது தொடர்பான முக்கிய அறிவிப்பொன்றைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ளார்.


 சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றுவோருக்கு 2 கோடி ரூபாய் வரை அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க வழிவகுக்கும் தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களை அழிப்பவர்களுக்கு எதிராக 1 மில்லியன் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.


மேலும், நாட்டின் மிக முக்கியமான முதலீடு கட்டடங்களை நிர்மாணிப்பதல்ல; எதிர்காலத் தலைமுறையினரான சிறுவர்களின் கல்வியையும் நற்பண்புகளையும் மேம்படுத்துவதே என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை கல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக, 23,000க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை தேசிய ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


நிதிச் சவால்கள் இருந்தாலும்,ஆசிரியர்களின் தொழில்முறை உரிமைகள்,சம்பளம்,மற்றும் அவர்களின் பணிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில்,புதிய ஆசிரியர் நியமனங்கள் எந்த பாடப்பிரிவுகளுக்கு,எந்த மாகாணங்களுக்கு,

எந்த கட்டங்களாக வழங்கப்படும் என்பது தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


இலங்கையில் இனி தப்பிக்க முடியாது – 2 கோடி ரூபாய் வரை அபராதம் பிரதமர் அதிரடி அறிவிப்பு இலங்கையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுகளை அகற்றுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இது தொடர்பான முக்கிய அறிவிப்பொன்றைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ளார். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றுவோருக்கு 2 கோடி ரூபாய் வரை அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க வழிவகுக்கும் தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களை அழிப்பவர்களுக்கு எதிராக 1 மில்லியன் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.மேலும், நாட்டின் மிக முக்கியமான முதலீடு கட்டடங்களை நிர்மாணிப்பதல்ல; எதிர்காலத் தலைமுறையினரான சிறுவர்களின் கல்வியையும் நற்பண்புகளையும் மேம்படுத்துவதே என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை கல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக, 23,000க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை தேசிய ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.நிதிச் சவால்கள் இருந்தாலும்,ஆசிரியர்களின் தொழில்முறை உரிமைகள்,சம்பளம்,மற்றும் அவர்களின் பணிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,புதிய ஆசிரியர் நியமனங்கள் எந்த பாடப்பிரிவுகளுக்கு,எந்த மாகாணங்களுக்கு,எந்த கட்டங்களாக வழங்கப்படும் என்பது தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement