இலங்கையின் முக்கிய போதைப்பொருள் விநியோக சந்தேகநபர்களில் ஒருவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள,‘ரன் மல்லி’ என அழைக்கப்படும் சரித் சந்தகெலும்,பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்டர்போல் (INTERPOL – சர்வதேச பொலிஸ் அமைப்பு) சிவப்பு அறிவிப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்,
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சரித் சந்தகெலும், நீண்ட காலமாக துபாயில் வசித்திருந்ததாகவும்,
இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புடையவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள,‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக,2025ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி,கிரிந்த – அந்தகவெல்ல கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது,ரூ.30 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாகக் கூறப்பட்ட 345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்திலும்,ரன் மல்லியின் தொடர்பு குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோன்று, 2022ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மகா ராவணன் கோட்டைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில்,
கடற்படை,விசேட அதிரடிப்படை, மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து கைப்பற்றிய 331 கிலோகிராம் ஹெரோயின் தொகையின் பின்னணியிலும்,அவரது பெயர் விசாரணைகளில் தொடர்புபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவை அனைத்தும் விசாரணை மற்றும் குற்றச்சாட்டு நிலைகளிலுள்ள தகவல்கள் என்பதால்,நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் எனக் கருத முடியாது.அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்,
சர்வதேச பொலிஸாரின் வலையில் சிக்கிய ‘ரன் மல்லி’ – இலங்கைக்கு எப்போது அழைத்துவரப்படுவார் இலங்கையின் முக்கிய போதைப்பொருள் விநியோக சந்தேகநபர்களில் ஒருவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள,‘ரன் மல்லி’ என அழைக்கப்படும் சரித் சந்தகெலும்,பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கையை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். இன்டர்போல் (INTERPOL – சர்வதேச பொலிஸ் அமைப்பு) சிவப்பு அறிவிப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்,வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சரித் சந்தகெலும், நீண்ட காலமாக துபாயில் வசித்திருந்ததாகவும்,இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்புகளுடன் தொடர்புடையவராக பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும்,தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள,‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.குறிப்பாக,2025ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி,கிரிந்த – அந்தகவெல்ல கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது,ரூ.30 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாகக் கூறப்பட்ட 345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்திலும்,ரன் மல்லியின் தொடர்பு குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அதேபோன்று, 2022ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மகா ராவணன் கோட்டைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில்,கடற்படை,விசேட அதிரடிப்படை, மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து கைப்பற்றிய 331 கிலோகிராம் ஹெரோயின் தொகையின் பின்னணியிலும்,அவரது பெயர் விசாரணைகளில் தொடர்புபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இவை அனைத்தும் விசாரணை மற்றும் குற்றச்சாட்டு நிலைகளிலுள்ள தகவல்கள் என்பதால்,நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் எனக் கருத முடியாது.அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்,கிரிந்த ஐஸ் கடத்தல்,பணமோசடி,மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில்,பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகமும்,குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.