• Sep 01 2025

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - திருகோணமலையில் இளைஞனின் நிலை

Chithra / Sep 1st 2025, 8:22 am
image


திருகோணமலை-  கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா மாலிந்துரை பகுதியை சேர்ந்த இளைஞனே  படுகாயங்களுக்கு உள்ளானதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கிண்ணியா பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - திருகோணமலையில் இளைஞனின் நிலை திருகோணமலை-  கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.கிண்ணியா மாலிந்துரை பகுதியை சேர்ந்த இளைஞனே  படுகாயங்களுக்கு உள்ளானதாக தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிண்ணியா பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்தநிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement