பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும்.
திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏற்படப்போகும் ஆபத்து - எச்சரிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது.அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும்.திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.