• Sep 01 2025

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எச்சங்கள்; நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்!- ஜனாதிபதி அநுர

Chithra / Sep 1st 2025, 12:13 pm
image

 

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின. 

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாண்புமிகு ஜனாதிபதி ஆகியோரின் உரைகள் நடைபெற்றன. 

இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது தையிட்டி சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களை பொலிஸார் கலைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு ஊடகவிளலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது. 


செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எச்சங்கள்; நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்- ஜனாதிபதி அநுர  செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாண்புமிகு ஜனாதிபதி ஆகியோரின் உரைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தையிட்டி சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களை பொலிஸார் கலைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.அத்தோடு ஊடகவிளலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement