விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இருவரினதும் முறையான கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க, தெரிவித்துள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறையில்உள்ள ராஜிதவுக்கும் நிமல் லான்சாவுக்கும் வீட்டு உணவு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரினதும் முறையான கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க, தெரிவித்துள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.