இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான 5 பேர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இதன்போது பாதாள உலக முக்கிய சூத்திரதாரியான கெஹல்பத்ரே பத்மே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
துருக்கிக்கு சென்று பதுங்கியிருக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் இருபது நாடுகளில் தாம் தங்கியிருந்தாகவும் அவற்றில் இந்தோனேசியாவே மிகவும் பாதுகாப்பான நாடாக கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை விடவும் இந்த நாடு 29 மடங்கு பெரியது. பெரிய சனத்தொகையை கொண்ட நாடு.
அதிகாரிகள் தம்மை கைது செய்வார்கள் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.
தமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படப் போகின்றது என்பதை உணர்ந்ததாகவும் பத்மே குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரி ஒலுகல இந்தோனேசியா வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை எனவும் கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்காவில் தரையிறங்கிய கெஹெல்பத்தர பத்மே, அண்மையில் தன்னால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மேல் மாகாண வடக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வாவை நேருக்கு நேர் கண்டதும் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரியை பார்த்த கெஹெல்பத்தர பத்மேவும் அவரது கூட்டாளியான கமோண்டோ சலிந்தவும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் லிண்டன் டி சில்வா பத்மேவை அணுகிய நிலையில் அவரை பார்த்து சிறு உரையாடலும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது கெஹெல்பத்தர பத்மேவின் அதிர வைக்கும் வாக்குமூலம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான 5 பேர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.இதன்போது பாதாள உலக முக்கிய சூத்திரதாரியான கெஹல்பத்ரே பத்மே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.துருக்கிக்கு சென்று பதுங்கியிருக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.உலகில் இருபது நாடுகளில் தாம் தங்கியிருந்தாகவும் அவற்றில் இந்தோனேசியாவே மிகவும் பாதுகாப்பான நாடாக கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையை விடவும் இந்த நாடு 29 மடங்கு பெரியது. பெரிய சனத்தொகையை கொண்ட நாடு.அதிகாரிகள் தம்மை கைது செய்வார்கள் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.தமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படப் போகின்றது என்பதை உணர்ந்ததாகவும் பத்மே குறிப்பிட்டுள்ளார்.அதிகாரி ஒலுகல இந்தோனேசியா வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை எனவும் கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கட்டுநாயக்காவில் தரையிறங்கிய கெஹெல்பத்தர பத்மே, அண்மையில் தன்னால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மேல் மாகாண வடக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வாவை நேருக்கு நேர் கண்டதும் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொலிஸ் அதிகாரியை பார்த்த கெஹெல்பத்தர பத்மேவும் அவரது கூட்டாளியான கமோண்டோ சலிந்தவும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது.பின்னர் லிண்டன் டி சில்வா பத்மேவை அணுகிய நிலையில் அவரை பார்த்து சிறு உரையாடலும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.