ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் வீதிகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும், வீதி வழியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரம்; 800 ஆக உயர்வடைந்த பலி எண்ணிக்கை தீவிரமாகும் மீட்பு பணி ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பல இடங்களில் வீதிகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும், வீதி வழியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.