• Sep 01 2025

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல்

Chithra / Sep 1st 2025, 3:52 pm
image


மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று  பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.

மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து  தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை, மேசை, ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீ பரவல் மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று  பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.மின் ஒழுக்கு ஏற்பட்டு களஞ்சியசாலையில் தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து  தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை, மேசை, ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement