• Sep 01 2025

மட்டக்களப்பில் மாபெரும் சதுரங்க போட்டி; முதன் முறையாக வெற்றி பெற்ற 67 பேர்

Aathira / Sep 1st 2025, 5:58 pm
image

மட்டக்களப்பில் முதன் முறையாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் 67 பேர் வெற்றிவாகை சூடியுள்ளனர். 

மட்டக்களப்பில் முதன் முறையாக நடைபெற்ற மாபெரும் சதுரங்கப் போட்டியில் 214 போட்டியாளர்கள் பங்கேற்று, 67 பேர் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்ற இப்போட்டி, ரொட்டரக்ட் கழகமும் சிங்கிங் பிஸ் செஸ் கழகமும் இணைந்து “செக்மேற் சம்பியன்சிப் 2025” என்ற பெயரில் சனி மற்றும் ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்களிலும்  (30,31.08.2025) நடைபெற்றது.

எட்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 

முதலிடம் பெற்ற எட்டுப் பேருக்கு தலா ரூ.5000 பணப்பரிசு, கேடயம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மேலும், 16 பேருக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள், என்பனவும்,  43 பேருக்குச் சிறப்புச் சான்றிதழ்களும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூவரும் முறையே 1, 2, 3ஆம் இடங்களைப் பெற்றமை போட்டியின் சிறப்பம்சமாகும்.



 

 



மட்டக்களப்பில் மாபெரும் சதுரங்க போட்டி; முதன் முறையாக வெற்றி பெற்ற 67 பேர் மட்டக்களப்பில் முதன் முறையாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் 67 பேர் வெற்றிவாகை சூடியுள்ளனர். மட்டக்களப்பில் முதன் முறையாக நடைபெற்ற மாபெரும் சதுரங்கப் போட்டியில் 214 போட்டியாளர்கள் பங்கேற்று, 67 பேர் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்ற இப்போட்டி, ரொட்டரக்ட் கழகமும் சிங்கிங் பிஸ் செஸ் கழகமும் இணைந்து “செக்மேற் சம்பியன்சிப் 2025” என்ற பெயரில் சனி மற்றும் ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்களிலும்  (30,31.08.2025) நடைபெற்றது.எட்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதலிடம் பெற்ற எட்டுப் பேருக்கு தலா ரூ.5000 பணப்பரிசு, கேடயம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், 16 பேருக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள், என்பனவும்,  43 பேருக்குச் சிறப்புச் சான்றிதழ்களும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூவரும் முறையே 1, 2, 3ஆம் இடங்களைப் பெற்றமை போட்டியின் சிறப்பம்சமாகும்.  

Advertisement

Advertisement

Advertisement