• Sep 01 2025

கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்துவைத்தார் அநுர; மகிழ்ச்சியில் யாழ்ப்பாண மக்கள்

Chithra / Sep 1st 2025, 3:33 pm
image

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. 

வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலகுவாக அந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த பிராந்திய அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, யாழ்.நூலகத்தின் ஈ-நூலக  வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் உலகில் எங்கும் வசிப்பவருக்கு யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். 


கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்துவைத்தார் அநுர; மகிழ்ச்சியில் யாழ்ப்பாண மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இலகுவாக அந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த பிராந்திய அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்.நூலகத்தின் ஈ-நூலக  வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் உலகில் எங்கும் வசிப்பவருக்கு யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். 

Advertisement

Advertisement

Advertisement