• Nov 23 2024

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பி.க்கள்!

Chithra / Sep 26th 2024, 12:14 pm
image

 பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் 45,000 ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள்.

ஆனால், அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி எம்.பி.க்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் 20, 2020 அன்று தொடங்கியது. அதன்படி, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பி.க்கள்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர்.பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் 45,000 ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள்.ஆனால், அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி எம்.பி.க்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் 20, 2020 அன்று தொடங்கியது. அதன்படி, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement