• Jul 05 2025

இத்தாலியில் எரிபொருள் நிலைய வெடிப்பு!- 45 பேர் படுகாயம்!

Thansita / Jul 5th 2025, 1:12 pm
image

இத்தாலியின் தலைநகர் ரோம் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 45 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

லொறியொன்று எரிபொருள் குழாய் மீது மோதியதன் காரணமாக முதற்கட்ட வெடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மற்றுமொரு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த வெடிப்புச் சம்பவம் அடர்த்தியான கரும் புகை தீப்பிழம்புகள் நகரம் முழுவதும் பரவ, ஜன்னல்களும் கட்டிடங்களும் அதிர்ந்தன. என மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.  

சம்பவத்துக்கான மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.


இத்தாலியில் எரிபொருள் நிலைய வெடிப்பு- 45 பேர் படுகாயம் இத்தாலியின் தலைநகர் ரோம் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 45 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் லொறியொன்று எரிபொருள் குழாய் மீது மோதியதன் காரணமாக முதற்கட்ட வெடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மற்றுமொரு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த வெடிப்புச் சம்பவம் அடர்த்தியான கரும் புகை தீப்பிழம்புகள் நகரம் முழுவதும் பரவ, ஜன்னல்களும் கட்டிடங்களும் அதிர்ந்தன. என மக்கள் தெரிவித்துள்ளனர்.தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தி, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.  சம்பவத்துக்கான மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement