இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) என்ற போர்க்கப்பல், இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், மீட்கப்பட்ட அவர்களின் உடல்கள் இலங்கை கடற்படையினரால் காலி - கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவின் 'மிலன் 2026' (MILAN 2026) சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சியில் 'ஐரிஸ் டெனா' மாலுமிகள் அணிவகுத்துச் சென்ற காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் வைத்து டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் இதுவரை 87 உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 61 படையினரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலின்போது கப்பலில் சுமார் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை,ஈரானின் கடற்படை வலிமையை முற்றிலுமாக அழிப்பதே தங்களது முக்கிய இலக்குகளில் ஒன்று என்று அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதையும், அமெரிக்காவின் "உலகளாவிய அணுகல்" மற்றும் இராணுவ பலத்தையும் நிரூபிக்கும் ஒரு சான்றாக, இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த ஈரானியக் கப்பலை, இரகசியமாகத் பின்தொடர்ந்து டோர்பிடோ மூலம் அழிப்பதன் மூலம் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.
அமெரிக்கா மூழ்கடித்த ஈரானிய கப்பலிலிருந்து 87 உடலங்கள் மீட்பு இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) என்ற போர்க்கப்பல், இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் குறைந்தது இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், மீட்கப்பட்ட அவர்களின் உடல்கள் இலங்கை கடற்படையினரால் காலி - கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவின் 'மிலன் 2026' (MILAN 2026) சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சியில் 'ஐரிஸ் டெனா' மாலுமிகள் அணிவகுத்துச் சென்ற காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.இந்த போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் வைத்து டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.இலங்கை கடற்படையினர் இதுவரை 87 உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 61 படையினரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலின்போது கப்பலில் சுமார் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதேவேளை,ஈரானின் கடற்படை வலிமையை முற்றிலுமாக அழிப்பதே தங்களது முக்கிய இலக்குகளில் ஒன்று என்று அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.சர்வதேச கடல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதையும், அமெரிக்காவின் "உலகளாவிய அணுகல்" மற்றும் இராணுவ பலத்தையும் நிரூபிக்கும் ஒரு சான்றாக, இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த ஈரானியக் கப்பலை, இரகசியமாகத் பின்தொடர்ந்து டோர்பிடோ மூலம் அழிப்பதன் மூலம் ஈரானுக்கு ஒரு எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.