2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 10.66% பரீட்சார்த்திகள் குறைந்தபட்சம் ஒரு எளிய தேர்ச்சியைப் பெறத் தவறிவிட்டனர்.
கல்விக்காக அரசு பாரிய நிதியை ஒதுக்கினாலும், ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் தேர்வில் தேர்ச்சிப் பெறத் தவறுவது கவலையளிக்கிறது.
எனினும், மூன்று முக்கிய பாடங்களிலும் 9,458 மாணவர்கள் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.இது பரீட்சை எழுதிய பரீட்சார்த்திகளில் 3.45% ஆகும்.
இதற்கிடையில், பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. எனவும் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையில் 9,458 ஏ சித்தி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 10.66% பரீட்சார்த்திகள் குறைந்தபட்சம் ஒரு எளிய தேர்ச்சியைப் பெறத் தவறிவிட்டனர்.கல்விக்காக அரசு பாரிய நிதியை ஒதுக்கினாலும், ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் தேர்வில் தேர்ச்சிப் பெறத் தவறுவது கவலையளிக்கிறது.எனினும், மூன்று முக்கிய பாடங்களிலும் 9,458 மாணவர்கள் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.இது பரீட்சை எழுதிய பரீட்சார்த்திகளில் 3.45% ஆகும்.இதற்கிடையில், பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. எனவும் தெரிவித்தார்.