சம்பூரில் முன்மொழியப்பட்ட அனல் மின்சார நிலையம் தற்போது கைவிடப்பட்டு சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில் -
ஏற்கனவே சம்பூரில் மும்மொழிழியப்பட்ட அனல் மின்சார நிலையம் தற்போது கைவிடப்பட்டு சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு சம்பூர் பிரதேசம் கடந்த கால யுத்தத்தின் போதும் யுத்தத்திற்கு பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட பிரதேசம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன பிரதியமைச்சர் அருண் தெரிவிப்பு சம்பூரில் முன்மொழியப்பட்ட அனல் மின்சார நிலையம் தற்போது கைவிடப்பட்டு சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில் - ஏற்கனவே சம்பூரில் மும்மொழிழியப்பட்ட அனல் மின்சார நிலையம் தற்போது கைவிடப்பட்டு சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.அத்தோடு சம்பூர் பிரதேசம் கடந்த கால யுத்தத்தின் போதும் யுத்தத்திற்கு பின்னரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட பிரதேசம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.