அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
"அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன," என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிக்கையுடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான "ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு" என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், "அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது!’ என்று கூறினேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு பின்னணியில், ட்ரம்பின் இந்த அறிக்கை ஈரான் விவகாரத்தில் அவர் மிகவும் கடுமையான கொள்கையைப் பின்பற்றுவதையே காட்டுகிறது.
இந்நிலையில் தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அரச நிறுவனங்களின் பணிகள் தடையின்றித் தொடர்வதாக அவர் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'X' சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் பின்னணியிலும், நாடு முழுவதும் மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதை ஜனாதிபதி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்
ஈரானின் தலைமைத்துவம் முடிவுக்கு வந்துவிட்டன ட்ரம்பின் அறிக்கைக்கு பதிலடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். "அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன," என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கையுடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான "ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு" என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், "அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்று கூறினேன்" எனப் பதிவிட்டுள்ளார். பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு பின்னணியில், ட்ரம்பின் இந்த அறிக்கை ஈரான் விவகாரத்தில் அவர் மிகவும் கடுமையான கொள்கையைப் பின்பற்றுவதையே காட்டுகிறது.இந்நிலையில் தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் உள்ள அரச நிறுவனங்களின் பணிகள் தடையின்றித் தொடர்வதாக அவர் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.'X' சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி, தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் பின்னணியிலும், நாடு முழுவதும் மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதை ஜனாதிபதி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்