• Mar 04 2026

எரிவாயு மற்றும் எரிபொருள் தொடர்பில் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் வசந்த சமரசிங்க

Chithra / Mar 3rd 2026, 7:39 pm
image

  

எரிவாயு மற்றும் எரிபொருள் தொடர்பில் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டிற்காக 380,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 24,000 மெட்ரிக் தொன் மற்றும் பெப்ரவரி மாதத்தில் 28,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டது.


மார்ச் மாதத்திற்கான தேவை 32,000 மெட்ரிக் தொன் ஆகும், ஆனால் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 31ஆம் திகதிக்குள் 10 கப்பல்கள் வரவுள்ளன.


தட்டுப்பாட்டை நீக்க ஒரு நாளில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களின்

விபரங்கள்:


12.5 கிலோ கிராம்: 82,901கொள்கலன்கள்

5 கிலோ கிராம்: 20,500 கொள்கலன்கள்

2.5 கிலோ கிராம்: 21,199 கொள்கலன்கள்


தினசரி விநியோகம் 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,800 மெட்ரிக் தொன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


எரிவாயு சந்தையில் 82% பங்கினைக் கொண்டுள்ள லிட்ரோ (Litro) நிறுவனம் விநியோகத்தை அதிகரித்துள்ளது.


சில நிறுவனங்கள் முறையாக எரிவாயுவை வழங்கத் தவறினால், நுகர்வோர் தங்களின் மஞ்சள் நிற கொள்கலன்களை நீல நிற கொள்கலன்களுக்கு மாற்றிக்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.


புதியதாக ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விநியோகம் இம்மாதம் 12-ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.


எரிபொருள் விநியோகம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஒக்டோபர் முதல் இதற்காக இந்தியாவில் இருந்து 17 கப்பல்களும், சிங்கப்பூரிலிருந்து 5 கப்பல்களும் வந்துள்ளன.


உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யத் தேவையான திட்டங்கள் இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து பொருட்களைச் சேமிக்கத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.


மத்திய கிழக்கு யுத்தம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தீர்மானிக்க எதிர்க்கட்சி தேவையில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


ஒரு இறையாண்மையுள்ள நாட்டை மற்றொரு நாடு அடிமைப்படுத்துவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை . உலகளவில் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த நிர்வாகத்தின் முக்கிய நிலைப்பாடாகும்.


தற்போதைய யுத்த நிலைமை பிராந்திய ரீதியாக, குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


இந்த மோதலானது மத்திய கிழக்கில் பணிபுரியும் இந்நாட்டைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சம் தொழிலாளர்களுக்கு பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.


போரை உடனடியாக நிறுத்தி மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் .


இந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அல்லது செய்தியைத் தீர்மானிக்க எங்களுக்கு எதிர்க்கட்சி தேவையில்லை என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். என தெரிவித்தார். 

எரிவாயு மற்றும் எரிபொருள் தொடர்பில் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் வசந்த சமரசிங்க   எரிவாயு மற்றும் எரிபொருள் தொடர்பில் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டிற்காக 380,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 24,000 மெட்ரிக் தொன் மற்றும் பெப்ரவரி மாதத்தில் 28,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டது.மார்ச் மாதத்திற்கான தேவை 32,000 மெட்ரிக் தொன் ஆகும், ஆனால் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 31ஆம் திகதிக்குள் 10 கப்பல்கள் வரவுள்ளன.தட்டுப்பாட்டை நீக்க ஒரு நாளில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களின்விபரங்கள்:12.5 கிலோ கிராம்: 82,901கொள்கலன்கள்5 கிலோ கிராம்: 20,500 கொள்கலன்கள்2.5 கிலோ கிராம்: 21,199 கொள்கலன்கள்தினசரி விநியோகம் 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,800 மெட்ரிக் தொன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.எரிவாயு சந்தையில் 82% பங்கினைக் கொண்டுள்ள லிட்ரோ (Litro) நிறுவனம் விநியோகத்தை அதிகரித்துள்ளது.சில நிறுவனங்கள் முறையாக எரிவாயுவை வழங்கத் தவறினால், நுகர்வோர் தங்களின் மஞ்சள் நிற கொள்கலன்களை நீல நிற கொள்கலன்களுக்கு மாற்றிக்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.புதியதாக ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விநியோகம் இம்மாதம் 12-ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.எரிபொருள் விநியோகம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் முதல் இதற்காக இந்தியாவில் இருந்து 17 கப்பல்களும், சிங்கப்பூரிலிருந்து 5 கப்பல்களும் வந்துள்ளன.உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யத் தேவையான திட்டங்கள் இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து பொருட்களைச் சேமிக்கத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.மத்திய கிழக்கு யுத்தம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தீர்மானிக்க எதிர்க்கட்சி தேவையில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.ஒரு இறையாண்மையுள்ள நாட்டை மற்றொரு நாடு அடிமைப்படுத்துவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை . உலகளவில் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த நிர்வாகத்தின் முக்கிய நிலைப்பாடாகும்.தற்போதைய யுத்த நிலைமை பிராந்திய ரீதியாக, குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த மோதலானது மத்திய கிழக்கில் பணிபுரியும் இந்நாட்டைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சம் தொழிலாளர்களுக்கு பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.போரை உடனடியாக நிறுத்தி மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் .இந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அல்லது செய்தியைத் தீர்மானிக்க எங்களுக்கு எதிர்க்கட்சி தேவையில்லை என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement