• Jun 17 2026

பெயாவெல் தோட்ட பகுதியிலுள்ள 50 ஆண்டுகள் பழமையான ஆபத்தான பாலம்!

Ziya / Jun 16th 2026, 11:53 am
image

மலையகப் பகுதிகளில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் அடிப்படை போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பல தசாப்தங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுவது மக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.


அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும், மலையக மக்களின் அடிப்படை அபிவிருத்தித் தேவைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 


தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறும் கருவிகளாக மட்டுமே பெருந்தோட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பலமுறை ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மகஜர்கள் கையளிக்கப்பட்ட போதிலும், நிலையான தீர்வுகள் கிடைக்காத நிலை தொடர்கிறது.


இந்த நிலையில், தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலம் குறித்து மக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். 


சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்தப் பாலமே அத்தோட்ட மக்களுக்கு ஆற்றைக் கடந்து வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரே வழியாக உள்ளது.



சுமார் 60 அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் ஊடாக முச்சக்கர வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. 


நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். 


வைத்தியசாலைகளுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்தப் பாலத்தையே நம்பியுள்ளனர்.


பெயாவெல் தோட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 1,200-க்கும் அதிகமான மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். 


மேலும் ரட்ணகிரி, நானுஓயா மற்றும் பாமஸ்டன் தோட்ட மக்களும் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக இந்தப் பாலத்தை நம்பியுள்ளனர்.


ஆனால், அரை நூற்றாண்டைக் கடந்துள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. 


பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கட்டமைப்புகள் பல இடங்களில் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. அதேவேளை, பாலத்தின் நடுப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஓட்டைகளும் உருவாகியுள்ளன. இதனால் பாலத்தை பயன்படுத்தும் மக்கள் தினமும் உயிர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெயாவெல் தோட்ட பகுதியிலுள்ள 50 ஆண்டுகள் பழமையான ஆபத்தான பாலம் மலையகப் பகுதிகளில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் அடிப்படை போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பல தசாப்தங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுவது மக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும், மலையக மக்களின் அடிப்படை அபிவிருத்தித் தேவைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறும் கருவிகளாக மட்டுமே பெருந்தோட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பலமுறை ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மகஜர்கள் கையளிக்கப்பட்ட போதிலும், நிலையான தீர்வுகள் கிடைக்காத நிலை தொடர்கிறது.இந்த நிலையில், தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலம் குறித்து மக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்தப் பாலமே அத்தோட்ட மக்களுக்கு ஆற்றைக் கடந்து வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரே வழியாக உள்ளது.சுமார் 60 அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் ஊடாக முச்சக்கர வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். வைத்தியசாலைகளுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்தப் பாலத்தையே நம்பியுள்ளனர்.பெயாவெல் தோட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 1,200-க்கும் அதிகமான மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரட்ணகிரி, நானுஓயா மற்றும் பாமஸ்டன் தோட்ட மக்களும் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக இந்தப் பாலத்தை நம்பியுள்ளனர்.ஆனால், அரை நூற்றாண்டைக் கடந்துள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கட்டமைப்புகள் பல இடங்களில் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. அதேவேளை, பாலத்தின் நடுப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஓட்டைகளும் உருவாகியுள்ளன. இதனால் பாலத்தை பயன்படுத்தும் மக்கள் தினமும் உயிர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement