புதுடெல்லியில் வெறும் 14 வயதுடைய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி திறமையால் இந்தியா மற்றும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு நாட்டின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றை இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
‘பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருதை வழங்கி அவரை இந்தியா கௌரவித்துள்ளது.
இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி, விக்யான் பவனில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வழங்கினார்.
இந்த விருது, 5 முதல் 18 வயதுக்குட்பட்டோர் விளையாட்டு, அறிவியல், சமூக சேவை மற்றும் கலை-கலாசாரம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது ஆகும்.
வைபவ் பீகார் அணிக்காக அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 84 பந்துகளில் 190 ஓட்டங்களை எடுத்ததில் சாதனை படைத்தார்.
இந்த தேசிய அங்கீகாரம், அவருடைய எதிர்கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 வயது வயதில் சாதனைபடைத்த சிறுவன்-உயர்விருதினை தன்பக்கம் தட்டிய சென்ற பெருமை புதுடெல்லியில் வெறும் 14 வயதுடைய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி திறமையால் இந்தியா மற்றும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு நாட்டின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றை இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கிறது. ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்’ விருதை வழங்கி அவரை இந்தியா கௌரவித்துள்ளது.இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி, விக்யான் பவனில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வழங்கினார்.இந்த விருது, 5 முதல் 18 வயதுக்குட்பட்டோர் விளையாட்டு, அறிவியல், சமூக சேவை மற்றும் கலை-கலாசாரம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது ஆகும்.வைபவ் பீகார் அணிக்காக அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 84 பந்துகளில் 190 ஓட்டங்களை எடுத்ததில் சாதனை படைத்தார்.இந்த தேசிய அங்கீகாரம், அவருடைய எதிர்கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.