• Oct 13 2026

செம்மணி அவலத்தைச் சித்தரித்த சிறுவன்; பெற்றோரை பொலிஸார் அழைத்தது ஏன்?

Chithra / Oct 13th 2026, 11:59 am
image


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டு விழாவின் வினோத உடைப் போட்டியில், செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரிக்கும் வகையில் வேடமணிந்து பங்கேற்ற சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று (13) விசாரணைக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் அமைந்துள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (12) செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.


இதன்போது இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறுவன் ஒருவர், செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்ட சிறுவர்களின் அவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து வந்திருந்தார்.


“காரணமே இல்லாமல், அம்மாவின் மார்பில் பால் அருந்திய நிலையில் என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்குமா?” என்ற வாசகம் எழுதப்பட்ட உடையை அணிந்திருந்த சிறுவன், தனது வேடத்தின் ஊடாக நீதிக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.


இதன்போது, சிறுவனிடம் விருந்தினர்கள், “நீங்கள் யாராக வந்துள்ளீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியபோது, “காரணமே இல்லாமல் செம்மணியில் என்னைப் புதைத்தார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.


தொடர்ந்து, “எங்கிருந்து, ஏன் இப்போது வந்துள்ளீர்கள்?” எனக் கேட்கப்பட்டபோது, “எனது இறப்புக்கும், என்னைப் போன்று புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு செம்மணி புதைகுழியிலிருந்து வந்துள்ளேன். எமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என என்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


சிறுவனின் இந்தப் பதில்கள் நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்களையும் விருந்தினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், செம்மணி புதைகுழி விவகாரத்தை நினைவூட்டும் வகையில் வேடமணிந்து பங்கேற்ற குறித்த சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

 

செம்மணி அவலத்தைச் சித்தரித்த சிறுவன்; பெற்றோரை பொலிஸார் அழைத்தது ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டு விழாவின் வினோத உடைப் போட்டியில், செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரிக்கும் வகையில் வேடமணிந்து பங்கேற்ற சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று (13) விசாரணைக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் அமைந்துள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (12) செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.இதன்போது இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறுவன் ஒருவர், செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்ட சிறுவர்களின் அவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து வந்திருந்தார்.“காரணமே இல்லாமல், அம்மாவின் மார்பில் பால் அருந்திய நிலையில் என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்குமா” என்ற வாசகம் எழுதப்பட்ட உடையை அணிந்திருந்த சிறுவன், தனது வேடத்தின் ஊடாக நீதிக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.இதன்போது, சிறுவனிடம் விருந்தினர்கள், “நீங்கள் யாராக வந்துள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பியபோது, “காரணமே இல்லாமல் செம்மணியில் என்னைப் புதைத்தார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.தொடர்ந்து, “எங்கிருந்து, ஏன் இப்போது வந்துள்ளீர்கள்” எனக் கேட்கப்பட்டபோது, “எனது இறப்புக்கும், என்னைப் போன்று புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு செம்மணி புதைகுழியிலிருந்து வந்துள்ளேன். எமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என என்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.சிறுவனின் இந்தப் பதில்கள் நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்களையும் விருந்தினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், செம்மணி புதைகுழி விவகாரத்தை நினைவூட்டும் வகையில் வேடமணிந்து பங்கேற்ற குறித்த சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement