• May 02 2026

முள்ளியவளை படைப்பிரிவு முகாமில் இடிந்து வீழ்ந்த செங்கல் சுவர்; இராணுவச் சிப்பாய் சாவு!

Chithra / Nov 4th 2025, 7:27 pm
image

 

முல்லைத்தீவு, முள்ளியவளையில்  உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அத்துடன் மேலும் 3 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த சிப்பாயும், காயமடைந்த 3 சிப்பாய்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த சிப்பாய்கள் மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


முள்ளியவளை படைப்பிரிவு முகாமில் இடிந்து வீழ்ந்த செங்கல் சுவர்; இராணுவச் சிப்பாய் சாவு  முல்லைத்தீவு, முள்ளியவளையில்  உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 3 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த சிப்பாயும், காயமடைந்த 3 சிப்பாய்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த சிப்பாய்கள் மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement