• Nov 07 2025

கடனுக்கு பெருள் வழங்காத்தால் கத்தியால் குத்திய கொடூரம்; யாழில் வர்த்தகர் படுகொலை!

shanuja / Oct 5th 2025, 3:04 pm
image

யாழில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்தச் சம்பவம் ஏழாலை மேற்கு பகுதியில்  நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது. சிங்காரவேல் தானலன் (வயது - 35) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இது குறித்து மேலும் தெரிய வருகையில்,


கொலை செய்யப்பட்ட நபர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற சந்தேகநபர் மிக்சர் பக்கட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். 


ஏற்கனவே கடனுள்ள காரணத்தால் குறித்த வர்த்தனர் மிக்சர் பைக்கட்டுகளை வழங்க மறுத்ததன் காரணமாக இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில் சந்தேகநபர் வர்த்தகரை கத்தியால் குத்தியதில் வர்த்தகர் உயிரிழந்துள்ளார். 


கொலையை மேற்கொண்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடனுக்கு பெருள் வழங்காத்தால் கத்தியால் குத்திய கொடூரம்; யாழில் வர்த்தகர் படுகொலை யாழில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏழாலை மேற்கு பகுதியில்  நேற்றிரவு  இடம்பெற்றுள்ளது. சிங்காரவேல் தானலன் (வயது - 35) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,கொலை செய்யப்பட்ட நபர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற சந்தேகநபர் மிக்சர் பக்கட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே கடனுள்ள காரணத்தால் குறித்த வர்த்தனர் மிக்சர் பைக்கட்டுகளை வழங்க மறுத்ததன் காரணமாக இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில் சந்தேகநபர் வர்த்தகரை கத்தியால் குத்தியதில் வர்த்தகர் உயிரிழந்துள்ளார். கொலையை மேற்கொண்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement