யாழ்.தொண்டமனாறு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சில நபர்கள் இணைந்து ஒரு நபர் மீது கொடூரமாகத் தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் நடத்தியதாக தெரிவித்தே குறித்த காணொளியில் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது.
மூவர் இணைந்து கட்டை மற்றும் கத்தியால் குறித்த நபரை தாக்குகின்றனர். அதை ஒருவர் காணொளியாக பதிவு செய்கிறார்.
தாக்குதலுக்குள்ளான நபர் தன்னை தாக்க வேண்டாம் என்று அலறி அலறி வலியில் அங்குமிங்குமாக ஓட ஓட துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சற்று நேரத்தின் பின்னர் ஒரு பெண் வந்து தாக்க வேண்டாம் அவனை வெளியே கலைத்து விடுங்கள், இனி எந்த பெண்களிடமும் இப்படம் பேசக்கூடாது என கூறுகிறார். அப்போது அந்த நபரை வீட்டின் வெளியே அழைத்துவரும் வரை தாக்குதல் நடக்கிறமை காணொளியில் பதிவாகியுள்ளது
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டுமே தவிர தாக்கும் உரிமை யாருக்கும் இல்லை எனவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் கருத்திட்டு வருகின்றனர்
வீட்டினுள் வைத்து நபர் மீது கட்டையால் கண்டபடி தாக்குதல்; தொண்டமனாறு பகுதியில் சம்பவம் யாழ்.தொண்டமனாறு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சில நபர்கள் இணைந்து ஒரு நபர் மீது கொடூரமாகத் தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொண்களிடம் தகாத வார்த்தை பிரயோகம் நடத்தியதாக தெரிவித்தே குறித்த காணொளியில் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. மூவர் இணைந்து கட்டை மற்றும் கத்தியால் குறித்த நபரை தாக்குகின்றனர். அதை ஒருவர் காணொளியாக பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான நபர் தன்னை தாக்க வேண்டாம் என்று அலறி அலறி வலியில் அங்குமிங்குமாக ஓட ஓட துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். சற்று நேரத்தின் பின்னர் ஒரு பெண் வந்து தாக்க வேண்டாம் அவனை வெளியே கலைத்து விடுங்கள், இனி எந்த பெண்களிடமும் இப்படம் பேசக்கூடாது என கூறுகிறார். அப்போது அந்த நபரை வீட்டின் வெளியே அழைத்துவரும் வரை தாக்குதல் நடக்கிறமை காணொளியில் பதிவாகியுள்ளது எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க வேண்டுமே தவிர தாக்கும் உரிமை யாருக்கும் இல்லை எனவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் கருத்திட்டு வருகின்றனர்