• May 12 2026

அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஒன்றுகூடுமாறு நாமல் ராஜபக்ஷ அழைப்பு

Chithra / Nov 17th 2025, 9:26 am
image

 

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து  தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் "இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. உருளைக்கிழங்கு, பூசணி மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு அந்த மக்கள் அரசாங்கத்தை வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது அந்த மக்கள் வீதிகளில் இறங்கினர்.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய அநீதியைச் செய்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த அரசாங்கத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பயப்படவில்லை.

போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்புண்டு என்று அரசாங்கம் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறது.

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி போதைப்பொருள்  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது அவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கினோம்.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் கணவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். ஆனால் கட்சி மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு - செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏமைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகிறது என தெரிவித்தார். 


அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஒன்றுகூடுமாறு நாமல் ராஜபக்ஷ அழைப்பு  அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து  தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் "இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. உருளைக்கிழங்கு, பூசணி மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு அந்த மக்கள் அரசாங்கத்தை வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இப்போது அந்த மக்கள் வீதிகளில் இறங்கினர்.அரசாங்கம் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய அநீதியைச் செய்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த அரசாங்கத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பயப்படவில்லை.போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்புண்டு என்று அரசாங்கம் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறது.போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி போதைப்பொருள்  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது அவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கினோம்.தற்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் கணவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். ஆனால் கட்சி மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு - செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏமைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகிறது என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement