• Nov 22 2024

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Anaath / Aug 25th 2024, 6:34 pm
image

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்கும் வண்ணம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்றையதினம் (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும்  30 ஆம் திகதி  அனுஷ்டிக்கப்படுகி்றது. வேதனைகளுடன் . சொல்லொனாத்துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். 

இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம் உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய  துரோகத்தின் வெளிப்பாடாக  தமிழ் மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள். கிட்டதட்ட 15 ஆண்டுகாலமாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை. இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில்  ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்களில் சிலர் இறந்தும் விட்டார்கள் அது கொடுமை.

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியளவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றேன் என  குறிப்பிடப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்கும் வண்ணம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.அவரால் இன்றையதினம் (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும்  30 ஆம் திகதி  அனுஷ்டிக்கப்படுகி்றது. வேதனைகளுடன் . சொல்லொனாத்துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம் உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய  துரோகத்தின் வெளிப்பாடாக  தமிழ் மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள். கிட்டதட்ட 15 ஆண்டுகாலமாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை. இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில்  ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்களில் சிலர் இறந்தும் விட்டார்கள் அது கொடுமை.இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியளவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றேன் என  குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement