• Dec 03 2024

யாழின் முக்கிய பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு...!

Sharmi / Feb 26th 2024, 11:52 am
image

யாழில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று(26)  காலை யாழ்ப்பாணம் பழைய தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற நபரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்நிலையில்,  உடனடியாக யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் குறித்த கார் முழுமையாக  எரிந்துள்ளது.

அதேவேளை குறித்த கார் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


யாழின் முக்கிய பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு. யாழில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இன்று(26)  காலை யாழ்ப்பாணம் பழைய தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற நபரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இந்நிலையில்,  உடனடியாக யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இருப்பினும் குறித்த கார் முழுமையாக  எரிந்துள்ளது.அதேவேளை குறித்த கார் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement