• Nov 24 2025

'சரிகமப'வில் 2வது இடத்தைதட்டிச் சென்ற சபேசன்! டைட்டில் ஜெயித்த சுஷாந்திகா

Chithra / Nov 24th 2025, 8:40 am
image

 சீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று இடம்பெற்றது.

இந்நிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்களில் அனைத்து இலங்கை வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சீசனின் வெற்றியாளராக, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வீடு பரிசாக வழங்கப்பட்டது. 


மூன்றாம் இடத்தை பெற்ற சின்னு செந்தமிழனுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. 

இதன்போது சின்னுக்கு ரசிகர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி பரிசாக அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து அவர் மேடையிலேயே கதறி அழ ஆரம்பித்துள்ளார். 

தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு ஒரு பழைய ஸ்கூட்டர் தான் வாங்க முடிந்தது எனவும், 'உன் வயதினர் எல்லோரும் புது கார் பைக் என வாங்கிவிட்டார்கள், ஆனால் நீ இப்படி இருக்கிறாய்' என வீட்டில் அப்பா கேட்டதை நினைவு கூர்ந்து சின்னு கண்ணீர் விட்டார். 


இதேவேளை கோல்டன் வாய்ஸ் என மக்களால் தேர்வு செய்யப்பட்ட பவித்ராவுக்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கம்  பரிசாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


'சரிகமப'வில் 2வது இடத்தைதட்டிச் சென்ற சபேசன் டைட்டில் ஜெயித்த சுஷாந்திகா  சீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று இடம்பெற்றது.இந்நிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்களில் அனைத்து இலங்கை வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை இந்த சீசனின் வெற்றியாளராக, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வீடு பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்ற சின்னு செந்தமிழனுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. இதன்போது சின்னுக்கு ரசிகர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி பரிசாக அனுப்பி இருக்கிறார். அதை பார்த்து அவர் மேடையிலேயே கதறி அழ ஆரம்பித்துள்ளார். தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு ஒரு பழைய ஸ்கூட்டர் தான் வாங்க முடிந்தது எனவும், 'உன் வயதினர் எல்லோரும் புது கார் பைக் என வாங்கிவிட்டார்கள், ஆனால் நீ இப்படி இருக்கிறாய்' என வீட்டில் அப்பா கேட்டதை நினைவு கூர்ந்து சின்னு கண்ணீர் விட்டார். இதேவேளை கோல்டன் வாய்ஸ் என மக்களால் தேர்வு செய்யப்பட்ட பவித்ராவுக்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கம்  பரிசாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement